பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்க அனுமதி கோரி தமிழகஅரசு மனு: உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணை

சென்னை:

ருத்துவ கலந்தாய்வுக்கு சென்னை  உயர்நீதி மன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்க அனுமதி கோரி தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

பொதுவாக மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின்னரே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டு நீட் தேர்வில் தவறான வினா காரணமாக மருத்துவ 2ம் கட்ட கலந்தாய்வு நடத்த சென்னை உயர்நீதி மதுரை கிளை தடை பிறப்பித்துள்ளது.

இதை எதிர்த்து, சிபிஎஸ்இ கல்வி வாரியம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதன்மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்துவ தற்கு ஆகஸ்டு 31-ந் தேதி வரை காலநீட்டிப்பு கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் காலநீட்டிப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடை பெற்றது.

அதைத்தொடர்ந்து உயர்நீதி மன்ற மதுரை கிளையின் தீர்ப்பின் நகலை தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள் மனுமீதான விசாரணை நாளை நடைபெறும் என்றும் அறிவித்தனர்.

தமிழகத்தில், பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 1,59, 631 பேரில் 1,04, 453 பேருக்கு கடந்த மாதம் 28ந்தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது . இதன் மூலம் 1,76,875 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.