சென்னை:

ஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் சிலை அவமதிப்புக்காக தமிழகஅரசு வெட்கி தலைகுனிய வேண்டும் என்று கடுமையாக சாடி உள்ளார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள்,  பள்ளிக்கு நாற்காலிகள், மேசைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்படவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , சிலை அவமதிக்கப்பட்டதற்கும்,  பேஸ்புக்கில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் வெளியிடப் பட்டதற்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்த தமிழகஅரசை வலியுறுத்தியுள்ளார்.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது – தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகி விட்டது. இதற்காக, காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்!

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.