Random image

பேரறிவாளன் உள்பட 7பேர் விடுதலை குறித்து தமிழகஅரசு உடனே முடிவு எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

சென்னை:

ராஜீவ் கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.

இந்த நிலையில், பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து உடனடியாக அமைச்சரவையை கூட்டி, அவர்களை விடுதி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழகஅரசு முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் இன்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, உச்சநீதி மன்ற தீர்ப்பை வரவேற்பதாக கூறினார். மறைந்த கலைஞர் இது குறித்து அரசிடம் பல்வேறு முறை கோரிக்கை வைத்து உள்ளார், அதற்கேற்றவாறு உச்சநீதி மன்றம்  நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது.  27 வருடங்களாக சிறையில் வாடி தவித்து கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனே தமிழக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்யவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

மேலும், சட்டமன்றத்தில் முதன் முறையாக குட்கா விவகாரத்தில் நான் தான் கேள்வி எழுப்பினேன். அதற்காகவே தங்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பது அனைவருக்குமே தெரிந்தது தான்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.