வருகிறது 50 இடங்களில் இலவச அம்மா வைஃபை மண்டலங்கள்

விரைவில் தமிழகத்தின் 50 முக்கிய பகுதிகளில் அம்மா இலவச வைஃபை மண்டலங்களை அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

jaya

அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் , அம்மா சிமெண்ட் இவற்றை தொடர்ந்து பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பூங்காக்களில் அம்மா வைஃபை மண்டலங்களை தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி அமைக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் முதல்கட்டமாக 50 பள்ளிகளில் இது அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ரூ.80 கோடி செலவில் சோழிங்கநல்லூரில் ஒரு ஐடி வளாகம் அமைக்கப்படும், மக்கள் அரசு துறைகளின் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்தக்கூடிய வகையில் 650 நிரந்தர இ-ரெஜிஸ்ட்ரேஷன் நிலையங்கள் அமைக்கப்படும் என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது