‘தமிழ்’ கற்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால்..

சென்னை,

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழ் மொழியை கற்க தொடங்கியுள்ளதாக ராஜ்பவன் செய்தி குறிப்பு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் (வயது 77) புரோஹித்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நியமனம் செய்தது. அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 6ந்தேதி தமிழக கவர்னராக பதவி ஏற்றார்.

பன்வாரிலால்  மகாராஷ்டிரா மாநிலத்த சேர்ந்தவர். இவர் 2015 ஆண்டில்  அசாம் மாநில ஆளுநராகவும், 2016-ல் மேகாலயா மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார். இவருக்கு தமிழ் தெரியாது

இந்நிலையில் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித், தமிழக மக்களின் தாய் மொழியான தமிழை கற்பதன் மூலம் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளலாம் என்றும், மக்களை தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும் என்பதால்,  தமிழ் கற்று வருகிறார்,.

அவருக்கு தமிழ் மொழியை  தமிழ் ஆசிரியர் ஒருவர் தமிழ் கற்றுக் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழக ஆளுநராக இருந்த பர்னாலாவும் இதுபோல தமிழை விரும்பி கற்றுக் கொண்டதும் தமிழில் கையெழுத்திட்டதும் குறிப்பிடத்தக்கது