தமிழக ஆளுநர் பன்வாரிலால் நாளை டில்லி பயணம்!

சென்னை,

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை தலைநகர் டில்லி செல்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடஙகியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதன்முறையாக தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அப்போது வணக்கம் என்றும், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி உரையை தொடங்கினார்.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநிடப்பு செய்வjhf எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதுபோன்ற சூழலில், தமிழக ஆளுநர் பன்வாரில் புரோகித் நாளை டில்லி செல்கிறார். அங்க  குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை 5.20 மணிக்கு பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலாலை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், ஜனாதிபதியை சந்திக்க சுமார் 6 மணி அளவில் நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி