சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக பிற மாவட்டங்களில் சிக்கி உள்ள தமிழர்கள் குறித்து ஒழுங்கு படுத்துவதற்காக சிறப்பு  ஐஏஎஸ் அதிகாரியை தமிழகஅரசு நியமித்து உள்ளது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும்  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக  கடந்த மார்ச் மாதம் 14ந்தேதி முதல் மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் வசித்து வரும் தமிழர்கள் மீண்டும் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாத சூழல் நிலவி வருகிறது. அவர்களை மீட்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிறரின் நடமாட்டம் குறித்து அறிந்து, ஒழுங்குபடுத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை நோடல் அதிகாரியாக தமிழக அரசு நியமித்து உள்ளது.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.