தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனைக்கு உத்தரவு…

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்துக்கும்  குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு (Pooled sample testing)  பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று  மட்டும் 1,130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 88,377ஆகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 4,894 குணமடைந்து வீடு திரும்பியதால் 1,26,670 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் பலியாகி உள்ள நிலையில், கொரோனா வால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2626 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 51,344 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தாக்கம் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள 21 மாவட்டங்களில்  Pooled sample testing  முறையில் குழு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

Pooled sample testing முறை  என்பது மொத்தமாக பலரது  ரத்த மாதிரிகளை சேகரித்து ஒரே முறை யில் பரிசோதனை செய்வதாகும். இதன் மூலம் சோதனை முடிவில் கொரோனா இல்லை எனில் அனைவருக்கும் ஒரே நேரத்தில் முடிவு தெரிந்து விடும்.

அதே சமயத்தில், அதில் பாசிடிவ் (கொரோனா) இருப்பதாக  முடிவு வந்தால், அனைவருக்கும்  மீண்டும் தனித்தனியாக சோதனை செய்யப்பட வேண்டியதும் அவசியம்.

இந்த புதிய முறையால்  நாள் ஒன்றுக்கு அதிகம் பேருக்கு,  பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையிலேயே தற்போது இதனை தொடங்குவதற்கு தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

கொரோனவை கண்டறிய வேண்டும் எனில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மருத்து வர்கள் தொடர்ச்சியாக தெரிவித்திருக்க கூடிய நிலையில் இந்த குழு பரிசோதனை மூலமாக தமிழகத்தில் மேலும் பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்கட்டமாக குறைவாக கொரோனா தொற்றுள்ள புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், திருவாரூர், தென்காசி, அரியலூர், நாகை, பெரம்பலூர், சேலம், கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இந்த முறை தொடங்கப்பட உள்ளது.

முதல்கட்டமாக,  க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன் களப்பணியாளர்களாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள்,  தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த சோதனை திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போல வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலமாக வருபவர்களுக் கும், தொழிற்சாலைப் பணியாளர்கள் ஆகியோருக்கும் குழு பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக 21 மாவட்டங்களுக்கும் சுற்றிக்க்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சோதனை மூலம்,  சமூகத்தில் விரைவாக பலருக்கு கெலாரோனா தொற்று குறித்து  விரைவாகக் கண்டறிய உதவும் என்றும், சோதனை செய்வதற்கான நேரத்தை மேம்படுத்தும் என்று அரசு  தெரிவித்து உள்ளது.