தமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர்  குற்றம்சாட்டி வரும் நிலையில்,  8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது என  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.   ஏப்ரல் 17 ஆம் தேதி வரை 47.05 லட்சம் டோஸ் தடுப்பூசீகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும்,  தற்போது தோராயமாக 8.8 லட்சம் டோஸ் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிடமிருந்து, தமிழகத்திற்கு இதுவரை  55.85 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர்,  தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வந்த தகவல்கள் தவறு என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.