மேகதாது அணை அனுமதி விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் நாளை தமிழக அரசு வழக்கு தாக்கல்

சென்னை:

காவிரியின் நடுவே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கும், அனுமதி அளித்த மத்திய அரசுக்கும் எதிராக உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு நாளை மனு தாக்கல் செய்ய உள்ளது.

உச்சநீதி மன்றத்தில்  நாளை தாக்கல் செய்ய தயாரிக்கப்பட்டுள்ள மனுவிற்கு தமிழக அரசின் சட்டத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பெங்களூர் நகரின் குடிநீர் தேவை என கூறி, காவிரியின் நடுவே, தமிழகத்திற்கு வரும் காவிரி  தண்ணீரை தடுக்கும் வகையில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்தது. இது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. மேலும், கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியது.

ஆனால், மத்திய நீர்வளத்துறை, தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது.

ஏற்கனவே, காவிரி தொடர்பான உச்சநீதி மன்ற தீர்ப்பில், கர்நாடகா காவிரியில் புதியதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றால், அதற்கு தமிழக அரசின் அனுமதி தேவை என உத்தர விட்டுள்ளது. ஆனால்,  உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நாளை மனு தாக்கல் செய்யவுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Tamil Nadu has filed a case against Megatatu Dam Approval in the Supreme court, மேகதாது அணை அனுமதி விவகாரம்: உச்சநீதி மன்றத்தை அணுக தமிழகஅரசு முடிவு
-=-