சென்னை:

மிழகத்தில் என்ஜினியரிங் படிப்புக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் நிலையில், மருத்துவ படிப்புக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த கல்வியாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு அமல்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைற உள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் இருக்கை ஒதுக்கீடு, படிப்புகளை தோ்வு செய்வது உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் மெடிக்கல் கவுன்சிலிங்கிற்காக சென்னை வரை வரும் நிலை உள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் சிரமப்பட வேண்டியதாக இருப்பதால் மெடிக்கல் கவுன்சிலிங்கை முழுவதுமாக ஆன்லைனில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறி உள்ளார்.

மேலும் நீட் தேர்வு முடிவு வெளியானவுடன் வரும் ஜூன் 6ந்தேதி  முதல மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்  என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனிலோய பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும்,  மேலும் கிராமப்புற மாணவர்கள் மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இதற்கான முயற்சிகள் மாநில சுகாதாரத்துறை மற்றும் மாநில தொழில்நுட்ப துறை இணைந்து செயலாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

: