ராஜேஷ் லக்கானி உள்பட தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை:

முன்னாள் தமிழக தேர்தல் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி உள்பட 2 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் நகர் மற்றும் கிராம ஊரக திட்ட ஆணையராக பதவி வகிக்கும் பியுலா ராஜேஷ் இந்திய மருத்துவம் மற்றும்  ஹோமியோபதி ஆணையராக மாற்றப்பட்டார்.

சிஎம்டிஏ முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானிக்கு  அடுத்த உத்தரவு வரும்வரை நகர மற்றும் கிராம திட்ட ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rajesh Lakhoni, Rajesh lakkani, Tamil Nadu IAS Officers, Tamilnadu Government, transferred, இடம்மாற்றம், தமிழக ஐஏஎஸ் அதிகாரி, ராஜேஸ் லக்கானி
-=-