தொழில் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம், தமிழக அரசு வளர்ந்து வரும் தொழில்முனைவர்களை ஊக்குவிக்கவும், தொழில்முனைப்பை மேம்படுத்தவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதற்கான  ஓர் முயற்சிதான் வரும் பிப்ரவரி 15ம் தேதி நடக்கவிருக்கும் “தமிழ்நாடு இன்னோவேஷன் கிராண்ட் சவால்” (TNIGC).

இந்த சவாலில் கலந்துக்கொண்டு வெற்றிப் பெறும் மூவருக்கு 5 லட்ச ரூபாய் அரசு விதை நிதியோடு, அடைக்காக்கும் இடம் மற்றும் வழிகாட்டுதலும் தர உள்ளது.

இந்தச் சவால் 3 பெரும் நிகழ்வாக பிரிக்கப்பட்டுள்ளது,

முதல் நிகழ்வு: ஸ்பிரின்ட் ஹேக்கதான் – சென்னையில், பிப்ரவரி 15 –17, 2019

இரண்டாம் நிகழ்வு: பூட்கேம்ப் – சென்னையில், பிப்ரவரி 22-24, 2019

மூன்றாம் நிகழ்வு: பிட்ச் ஃபெஸ்ட் – சென்னையில், பிப்ரவரி 24, 2019

சவாலின் அமைப்பு:

பிப்ரவரி 15 துவங்கும் முதல் நிகழ்வான ஸ்பிரின்ட் ஹேக்கதான் தொடர்ந்து 48 மணிநேரம் நடக்கும். இந்நிகழ்வின் போது போட்டியாளர்கள் தங்களது முன் மாதிரி படைப்புகளை வழிகாட்டிகளின் உதவியோடு மேம்படுத்தலாம்.

அதன் பின் நிகழ்வின் முடிவில் போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை அல்லது யோசனைகளை நடுவர்கள் முன் வெளிப்படுத்தவேண்டும்.

சிறந்த போட்டியாளர்கள் அடுத்த நிகழ்வுக்கு தேர்வு செய்யப்படுவர்.

பிப்ரவரி 22-24 – ல் நடக்கவிருக்கும் பூட்கேம்ப்பில் தேர்ச்சிப்பெற்ற போட்டி யாளர்கள் தங்களது வணிக முன்னோக்கை, பட்டறைகள் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் மூலம் மேம்படுத்தி மெருகேற்றலாம்.

இதனைத் தொடர்ந்து இறுதிநாள் பிப்ரவரி 24 அன்று போட்டியாளர்களுக்கான பிட்ச் ஃபெஸ்ட் நடைபெறும். போட்டியின் துவக்கத்தில் இருந்து பெற்ற யோசனைகளை, பயிற்சிகளின் உதவியோடு சிறந்த மெருகேற்றிய தொழில் சிந்தனை அல்லது படைப்புகளை தேர்ந்த நடுவர்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் வெற்றிபெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட உள்ளது.