எரிசக்தி, காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: அமைச்சர் தங்கமணி

சென்னை:

காற்றாலை மின்சாரத்திலும், எரிசக்தி துறையிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அமைச்சர் தங்கமணி கூறினார்.

சென்னையில் நேற்று 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்பட அமைச்சர்கள்,அதிகாரிகள் பங்கேற்றனர்.

இன்று 2வது நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 2ம் நாளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எம்.சி. சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து மாநாட்டு கருத்தரங்கில் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் எரிசக்தி துறையில் தொழில் துவங்க பல்வேறு புதுமையான திட்டங்களை தமிழக அரசு வழங்கி உள்ளதாகவும் கூறினார். அதுபோல,  காற்றாலை மின்சாரத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாநாடு முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, மதுரை, ராமநாதபுரம், சிவங்கை மாவட்டங்களில் சூரிய ஒளி மின்சார பூங்காக்கள் அமைக்கப்படும் என்றார். இதன் மூலம் 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும்  கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2nd global investors meet, EB MINISTER THANGAMANI, energy, Energy and wind power generation, Minister Thangamani, Tamil Nadu is No.1 State, wind power, அமைச்சர் தங்கமணி, உலக முதலீட்டாளர் மாநாடு, எரிசக்தி துறை, காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம்
-=-