சென்னை:
பிளாஸ்மா தெரபியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை சுற்றிப்பார்த்த அமைச்சர், அங்கு மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘இந்தியாவில் 44 பிளாஸ்மா மையங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனை உள்பட சில மருத்துவமனை களுக்குஅனுமதி கிடைத்துள்ளது.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதுவரை 26 பேருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு, 24  பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்று, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக  திகழ்கிறது. ஐ.சி.எம்.ஆரின்இன் பிளாஸ்மா தெரபி டிரையல் வெற்றிகரமாக அமைந்துள்ளது’
இந்தியாவிலேயே அதிகப்படியான பிளாஸ்மா தெரபி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தான் செய்யப்பட்டுள்ளது.
உயர்தர மருத்துவமனைகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிளாஸ்மா தெரபி விரிவுபடுத்தப்படும்.  அதற்காக  இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் வாங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.