தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! சபாநாயகர்

சென்னை:

மிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி கூடியது. அன்றைய தினம் துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து நடைபெற்ற அலுவலல் ஆய்வு கூட்டத்தில் சட்டமன்றத்தை வரும் 20ந்தேதி வரை கூட்டுவது என முடிவு செய்யப்பட்டு, சபாநாயகர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட சட்டமன்ற கூட்டம் .17-ஆம் தேதி (திங்கட்கிழமை  காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான விவாதம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

கடைசி நாளான முதல்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2020 Budget session, Budget session, சபாநாயகர், தனபால், தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! சபாநாயகர்
-=-