சென்னை:

மிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தகித்து வரும் நிலையில், வரும்   28ம் தேதி தமிழக சட்டமன்ற கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்து உள்ளார். எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வு குழுவின் ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம்  14ந்தேதி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், வரும் 28ந்தேதி மீண்டும் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே படந்த பிப்ரவரி 8ந்தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, 3 நாட்கள் மட்டுமே விவாதங்கள் நடைபெற்றது. அதையடுத்து  பிப்ரவரி 14ம் தேதி துணை முதல்வரான நிதி அமைச்சர்   ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

பின்னர் அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த  கூட்டத்தொரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறு கிறது.

அப்போது குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.