தமிழக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு! தமிழகஅரசு உத்தரவு

சென்னை:

மிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக தமிழக அரசு உயர்த்தி அரசாணை வெளியிட்டு உள்ளது.

ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி  அறிவித்த நிலையில் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகத்தில்  எம்எல்ஏக்களின் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 கோடி இருந்து வருகிறது. இதை உயர்த்தக்கோரி எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம், சட்டசபை கூட்டத்தொடரின்போது,  தொகுதி மேம்பாட்டு நிதி மேலும் 50 லட்சம் ரூபாய் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி