ஆகஸ்டு 1, 2 தேதிகளில் தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

--

சென்னை:

மிழக சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக்குழு கூட்டம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 1 மற்றும் 2ந்தேதிகளில் நடைபெறும் என்று தமிழக எதிர்க்கட்சித்  துணைத்தலைவரும், திமுக முதன்மை செயலாளருமான துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ப.தனபால் மற்றும் சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் ஆகியோரைச் சந்தித்து பொதுக்கணக்கு குழு கூட்டம் குறித்து விவாதித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன்,  ஆகஸ்டு 1, 2 தேதிகளில் தமிழக சட்டப்பேரவயின்  பொதுக் கணக்குக் குழு கூட்டம் நடைபெற உள்ளது என கூறினார்.

இதுகுறித்து சபாநாயகர் தனபால் மற்றும் பேரவை செயலர் ஆகியோரிடம்  எந்தெந்த துறைகளின் கணக்குகளை எடுத்துக்கொள்வது, எந்த ஆண்டுகளுக்கு உள்ள கணக்குகளை எடுத்துக் கொள்வது என்பது குறிதும்,  அதற்கான அஜெண்டாவை தயார் செய்வது குறித்தும் விவாதித்தாக தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு, திமுக பொதுக்குழு விரைவில் கூட  உள்ளது என்பதை உறுதி செய்தார். ஆனால், இதன் காரணமாக  திமுகவில் எந்த வித மாற்றமும் வரப்போவதில்லை என்றும் தெரிவித்த துரைமுரகன்,  வர உள்ள  உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என எந்தத் தேர்தல் வந்தாலும் திமுக சந்திக்க தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.