சென்னை:

ண்ணீர் பிரச்சினை, தங்கத்தமிழ்செல்வன் பிரச்சினை போன்றவற்றால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. 23 நாட்கள் நடைபெற உள்ள இந்த தொடரில் சபாநாயகர் மீதான நம்பிக்கை யில்லா தீர்மானம் உள்பட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 8ந் தேதி துணை முதல்வர் ஓபிஎஸ்சால் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது நான்கு நாட்கள் விவாதம் நடைபெற்ற துடன் மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமலேயே சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்தால் ஒத்தி வைக்கப்பட்ட  சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் தண்ணீர் பிரச்சினை உள்பட சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவற்றால் சபை நிகழ்ச்சிகள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிப்பது தொடர்பாக, நாளை 11.30 மணிக்கு  அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல திமுக சார்பில் நாளை எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.