சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது..  2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார்.  ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

இன்றைய கூட்டத்தில்,  ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கொரோனா உள்பட பல்வேறு தமிழக அரசின் சாதனைகளை தனது உரையில் தெரிவித்தார். தொடர்ந்து, ஆளுநரின் ஆங்கில உரையை  சபாநாயகர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து கூறினார்.

அதைத்தொடர்ந்து,   சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடியது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் முடிவுகளை சட்டசபையில் சபாநாயகர் அறிவித்தார்.

அதன்படி,  தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்  பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும்,  மேலும் 3 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.