சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு! சபாநாயகர் தனபால்

சென்னை:

மிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவுபெறுவதாக  சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14ந்தேதி தொடங்கி 20ந்தேதி முடிவடைந்தது. 14ந்தேதி அன்று தமிழக துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வாசித்தார். அதைத் தொடர்ந்து, 5 நாட்கள் விவாதம் நடைபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக மானிய கோரிக்கை குறித்து விவாதிக்க பட்ஜெட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 9ம் தேதி தொடங்ககி ஏப்ரல் 9ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 9ந்தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில், பல்வேறு மானிய கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.

மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் அரசு, சட்டப்பேரவை நிகழ்வு என்கிற பெயரில் 200-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் கூட்டி வைத்து நடத்துவது அனைவரையும் பாதிக்கும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வயதானவர்களாக இருப்பதால் சட்டப்பேரவையை ஒத்திவைக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இன்றைய கூட்டத்தொடரில் தமிழகஅரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள்  வெளிநடப்பு செய்தன.

இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் நாளையும் நிறைவு பெறும் சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார்.

முன்னதாக ஏப்-9க்கு நிறைவு என்பதை மார்ச் 31 வரை என மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது.