மேகதாது அணை விவகாரம்: இன்று மாலை தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம்

சென்னை:

மேகதாது அணைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுது குறித்து விவாதிக்க  தமிழக சட்டப்பேரவை யின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.

காவரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய நீர்வளத் துறை அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவை  சிறப்புக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

சுமார் இந்தக் கூட்டம் ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை நடைபெறும் இந்த கூட்டத்தில்,  காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஏற்கனவே மேகதாது அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஸ்டெர்லைட் தொடர்பாக விவாதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான தீர்மானங்கள் தமிழக முதல்வரால் தாக்கல் செய்யப்பட்டு, அதுகுறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த சிறப்பு கூட்டத்தில்,  தி.மு.க. காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும்  கலந்துகொள்வார்கள் என்று நம்பப்படுகிறது.