தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது: மறைந்த அன்பழகன் உள்பட 3 பேருக்கு இரங்கல் தீர்மானம்

சென்னை:

மிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது. இந்த தொடரில் மானியக்கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளது.

முதல்நாள் கூட்டமான இன்று  மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்,  திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, எஸ்.காத்தவராயனுக்கு ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம்  நிறைவேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்த பேரவை ஒத்தி வைக்கப்பட்டு நாளை மீண்டும் கூடுகிறது.

நாடு முழுவதும் சிஏஏக்கு எதிரான போராட்டம் மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களால் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தொடர் இன்று முதல் (9ந்தேதி)  ஏப்ரல் 9ந்தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், 26 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.