சென்னை:

மிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில், பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந்தேதி வரை பேரவையை நடத்த சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 23 நாட்கள் சட்டமன்றம் செயல்படும்.

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் துணைமுதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தால் தாக்கப்பட்டது. அதன்மீது சுமார் ஒரு வாரம் மட்டுமே விவாதங்கள் நடைபெற்ற நிலையில், மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்காமலேயே லோக்சபா தேர்தல் காரணமாக சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள், அதற்கான துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெற வரும் 28ந்தேதி சட்டமன்ற கூறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இன்று சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன்படி,   தமிழக சட்டப்பேரவை வரும் 28 ஆம் தேதி முதல் ஜூலை 31 வரை சட்டப்பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்ஜூலை 1 ஆம் தேதி சாபாநாயகர் மீதான நாம்பிக்கையில்லா தீர்மானம் சட்டப்பேரவை யில் கொண்டுவரப்பட உள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டப்பேரவை கூட்டம் மொத்தம் 23 நாட்கள் நடைப்பெறயுள்ளதாகவும் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.