தமிழ்நாடு உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு!


சென்னை,

மிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக,  ஐகோர்ட்டு உத்தரவுபடி தற்காலிகமாக உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்த தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

மேலும் விசாரணை முடிவடையாத நிலையில் நீதிபதிகள் அறிவித்தபடி டிசம்பர் மாதம் 31–ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க முடியாத சூழலே ஏற்பட்டது/

அதைத்தொடர்ந்து ஏற்கனவே நியமிக்கப்பட்ட தனி அவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு (ஜூன் மாதம் வரை)  நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.