தமிழக உள்ளாட்சி தேர்தல்: 27மாவட்டங்களில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

சென்னை:

மிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், 9 மாவட்டங்களில் தவிர  27 மாவட்டங்களுக்கான ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம்  டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்தலில் போட்டியி போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என தீர்ப்பு கூறியது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பானை வெளியிடப்பட்டது.

அதன்படி   தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள்

இன்று (09-12-2019) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 16ம் தேதி கடைசி நாள்

 வேட்பு மனு பரிசீலனைகள் டிசம்பர் 17ம் தேதி

மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 19ம் தேதி கடைசி நாளாகும்.

வாக்குப்பதிவு தேதிகள்: டிசம்பர் 27, 30

வாக்குகள் எண்ணிக்கை: ஜனவரி 2ம் தேதி

வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு ஜனவரி 6ம் தேதி