சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது அதற்குள் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இதற்கிடையில், சிபிஎஸ்இ 10 வது  மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் மே மாதத்தில் நடைபெற உள்ளதால், தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரலுக்குள் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் 2 நாள் முகாமிட்ட இந்திய தேர்தல் ஆணையர், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த மாத இறுதியில், தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை வெளியிடுவார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வரும் 23ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால்,  அவை முடிந்த பிறகு, இம்மாத இறுதியில்,  தேர்தல் தேதி  அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஏப்ரல் இறுதி வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையானது மே மாதம் 2வது வாரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது  என்று கூறப்படுகிறது.

கூட்டணி கலாட்டா-6: 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 தேர்தலில் எதிரொலிக்குமா?