டில்லி:

மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என தமிழில் உறுதிமொழி கூறி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சண்முகம், வில்சன் மற்றும்  அதிமுக உறுப்பினர்கள் சந்திரசேகர், முஹம்மத் ஜான் பதவியேற்று கொண்டனர்.

அதிமுக கூட்டணியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் இன்று பதவி ஏற்கவில்லை.

தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா  உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் (24ம் தேதி) முடிவடைந்ததால், புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட  நிலையில், அதிமுக சார்பில் 3 பேரும், திமுக சார்பில் 3 பேரும் போட்டியிட்டனர். அவர்கள்  அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

அதன்படி திமுகவைச் சேர்ந்த சண்முகம் வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் அதிமுக வேட்பாளர்கள், முஹம்மத் ஜான் சந்திரசேகரன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரான பாமக அன்புமணி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் பதவி ஏற்பு இன்று ராஜ்யசபாவில் நடைபெற்றது. ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.