சென்னை:

மிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளின் எண்ணிக்கை  நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் மாநில கால்நடைத்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கால்நடைத்துறை தலைவர் ஞானசேகரன், கடந்த 2012ம் ஆண்டு  சென்னையில் 12 ஆயிரத்து 771 பசு மற்றும் எருமை மாடுகள் இருந்ததாகவும், தற்போது அது 46 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 லட்சத்து 19 ஆயிரம் மாடுகள் இருந்த நிலையில், தற்போது 7 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,  5 லட்சத்து 33 ஆயிரம் பசு மற்றும் எருமை மாடுகளே இருந்ததாகவும், ஆனால் தற்போது 6 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம், பால் பொருட்கள் மற்றும் இறைச்சியின் தேவை அதிகரித்திருப்பது.

அதுபோல தமிழகஅரசு சார்பில் விலையில்லாத ஆடு மாடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வருவதும், கால்நடைகள் அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பான கணக்கெடுப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி தற்போதுதான் நிறை வடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.