உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்

பிரேசில்:

பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட  தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கலந்துகொண்ட இளவேனில், இறுதிப்போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஏற்கனவே கடந்த ஆண்டு சிட்னில்   ஐஎஸ்எஸ்எஃப் சார்பில் நடைபெற்ற  ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்,  மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில், இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழக வீராங்கனையான  இளவேனில் வளரிவான்  தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.