மைசூர்,

திமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக, எடப்பாடியை மாற்ற கோரி ஆளுநரிடம் மனு கொடுத்த அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் புதுச்சேரியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு  மைசூர் அருகே உள்ள கூர்க் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மைசூரு அருகே உள்ள  சோமவார்பேட்டை தாலுகா, குஷால்நகர் எல்லை 7வது ஓசகோட்டை என்ற பகுதியில் உள்ள பன்டிக்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு  யாரிடமும் பேசக்கூடாது என்று டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி கொடுக்காமலும், குறிப்பாக செய்தியாளர்களை சந்திக்க கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த  ரிசார்ட் அன்னியர் யாரும் செல்லாதவாறு மேலும் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு நடைபெற்றது. அதில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூர்க் விடுதியை தமிழக போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

கூர்க் விடுதியில் டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர் வலுக்கட்டாய மாக அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்தே அந்த விடுதிக்கு போலீசார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த விடுதிக்குள் காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மப்டியில் சென்ற போலீசார், ஸ்பாட்டுக்கு சென்றபிறகே போலீஸ் உடைக்கு மாறி, அதிரடியாக விடுதிக்குள் புகுந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.