தமிழக அரசியலில் பரபரப்பு: டிடிவி ஆதரவாளர்களுடன் பெங்களூரில் தனி ஆலோசனை!

சென்னை,

சிறையில் இருந்து ஜாமினில் வெளியான டிடிவி தினகரன் பெங்களூரில் தனது ஆதரவு எம்எல்ஏ, எம்.பி.க்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கட்சியில் இருந்து ஒதுங்குவதாக ஏற்கனவே அறிவித்த தினகரன், தற்போது கட்சி பணிகளில் மூழு மூச்சில் இறங்கப்போவதாக அறிவித்தார். இது அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்தபின் கட்சியில்  அதிரடி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில், டிடிவி தினகரன் பெங்களூர் சென்றுள்ளார்.

இதற்கிடையில், தமிழக நிதிஅமைச்சர் ஜெயக்குமார் தலைமையில்  அனைத்து அமைச்சர்களும் தனியாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் பெங்களூரில் தனக்கு ஆதரவான ஒரு எம்.பி மற்றும் 6 எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.