தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல்… சுனில் அரோரா

சென்னை: தமிழகம், புதுச்சேரியில்  சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றப்பேரவையின் ஆயுட்காலம் மே 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி உள்ளதுஅதன்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அன்றைய தினமே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு (2021) நடை பெற இருப்பது 16 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகும்.  தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 62.6 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எனவும்  சோழிங்கநல்லூர் சட்டசபையில் 694,845 வாக்காளர்களுடன் அதிக தகுதி வாய்ந்த வாக்காளர்கள் உள்ளனர் .

தமிழகத்தில் கடந்த 2016சட்டமன்ற  தேர்தலின்போது 66ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது  மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

இது கடந்த தேர்தலை விட 34.73 சதவிகிதம் அதிகம்.  ஒரு வாக்குச்சாவடியில் அதிகப்பட்சமாக 1000 வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்களிக்கும் நேரம் ஒருமணி நேரம்  அதிகரிக்கப்படுகிறது

வீடு வீடாக சென்று 5 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும்

என்று கூறியவர், ஊனமுற்றோர்களுக்காக சக்கர நாற்காலிகள், சாய்வு தளம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

தமிழக தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கலுக்கு 2 பேர் மட்டுமே அனுமதி. இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
வாக்கு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கும்.
தமிழகத்தில்  வேட்பாளர் 30.8 லட்சம் ரூபாய் செலவு செய்ய அனுமதி.
புதுச்சேரியில் 22 லட்சம் ரூபாய் செலவு செய்ய அனுமதி.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் மார்ச் 12ந்தேதி

வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் மார்ச் 19ந்தேதி

வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ந்தேதி

வேட்புமனு திரும்பப்பெறும் நாள் : மார்ச் 22ந்தேதி

வாக்குப்பதிவு நடைபெறும் நாள் ஏப்ரல் 6ந்தேதி

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 2ந்தேதி.