தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் பதவி ஏற்றார்!

சென்னை:

மிழக தேர்தல் ஆணையாளராக மாலிக்பெரோஸ்கான் இன்று பதவி ஏற்றார். ஏற்கனவே பதவி வகித்து வந்த சீதாராமன் கடந்த மாதம் 22-ந் தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், மாலிக் பெரோஸ்கானை  தமிழக தேர்தல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத்தொடர்ந்து இன்று காலை அவர் பொறுப்பேற்றார்.

மாலிக் பெரோஸ்கான் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக  பணியாற்றியவர். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதுதொடர்பான பணிகளில் சிறப்பான அனுபவம் பெற்றவர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற வேண்டிய  தமிழக உள்ளாட்சி தேர்தல், இடஒதுக்கீடு பிரச்சினை காரணமாக ரத்து செய்யப்பட்டு சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக தேர்தல் ஆணையம் பல்வேறு கண்டனங்களுக்கு ஆளாகி உள்ள நிலையில் தற்போது புதிய ஆணையாளராக மாலிக் பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி