குஜராத் அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டு சிலைகள்: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை:

குஜராத் அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது குறித்து, அதை நிர்வகித்து வரும்  சாராபாய் பவுண்டேசனுக்கு , 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை ஐ.ஜி.பொன் மாணிக்க வேல் தலைமையிலான சிலை தடுப்பு காவல்துறையினர் மீட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், குஜராத் சாராபாய் பவுண்டேசன் நிறுவனம் நடத்தி வரும் அருங்காட்சியகத்தில் தமிழகத்துக்குச் சொந்தமான 35 சிலைகள் உள்ளதாகவும் அவை அனைத்தும் சட்ட விரோதமாக  தமிழகத்தில் இருந்து அங்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும், எனவே, அவற்றை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் இதுகுறித்து சாராபாய் பவுண்டேஷன் 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.