Random image

ஸ்டெர்லைட் கமிட்டி விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

டில்லி:

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் குழு அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

ஏற்கனவே அவசர வழக்காக விசாரித்த மறுத்த உச்சநீதி மன்றம், இன்றைய விசாரணையின்போது, , தமிழக அரசின் கோரிக்கை ஏற்க மறுத்து விட்டது.

ஏற்கனவே  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு  தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போதும் தமிழகஅரசின் மனு மீது தடை விதிக்க முடியாது என உச்சநீதி மன்றம் கைவிரிவித்து விட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த மே மாதம் 13ந்தேதி நடத்திய மாபெரும் போராட் டத்தில் காவல்களின் துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகஅரசின் உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,  ஆலை மூடப்பட்ட  விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து  தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தது. அதில், விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்று  விசாரிக்க கோரியது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயமும், உச்சநீதி மன்றமும் தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாகவே  செயல்பட்டு வருவது தூத்துக்குடி பகுதி மக்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.