இந்தியாவின் போர் விமானங்கள் தமிழகத்தில் தயாராகிறது

பெங்களூரு:

இலகு ரக தேஜாஸ் விமானங்களை மேம்படுத்த விமான மேம்பாட்டு முகமை வடிவமைத்தது. இதை விமானப் படையின் அடுத்த தலைமுறைக்கு ஏற்ப நவீன நடுத்தர விமானமாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கோவையை சேர்ந்த தொழில்நுடப் வல்லுனர்களின் பங்களிப்பை எதிர்நோக்கியுள்ளது.

 

இந்தியாவின் போர் விமானங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் தயாரிப்பது இது முதல் முறை கிடையாது. ஆனால், பெங்களூருக்கு வெளியே உள்ள தனியார் நிறுவனங்களை தேர்வு செய்வது இது தான முதன்முறையாகும். கோவையில் சூளூரில் தேஜாஸ்க்கு நிரந்தர தளம் அமைத்து செயல்படுத்தப்படுகிறது. இது தமிழகத்திற்கு வரும் முதல் பெரிய அளவிலான ராணுவ விமான திட்டமாகும்.

செயல்பாட்டில் உள்ள தேஜாஸ் விமானங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்படவுள்ள 5வது தலைமுறை விமானங்கள் குறித்து திட்ட இயக்குனர் கிரிஷ் தியோதர் கூறுகையில், ‘‘சில தொழிற்சாலைகளில் இருந்து விண்ணப்பங்கள் மட்டுமே தற்போது வரவேற்க்கப்படுகிறது. அதனால் தற்போதைய நிலையில் நிறுவனங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கையை வெளியிட முடியாது. இறுதி முடிவு எடுக்கப்படும் போது தான் இவை வெளியிடப்படும்’’ என்றார்.