கேரளா செல்லும் ரெயில்கள் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை:

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு குறைந்து இயல்பு நிலை மீண்டு வரும் நிலையில் சென்னையில் இருந்து கேரளா செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரத்தை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

கேரளாவில் கடந்த 20 நாட்களாக பெய்து வந்த வரலாறு காணாத பேய் மழை காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தறபோது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், கேரளா செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

கொல்லம்-தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்:06028), கொல்லத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) புறப்படும் ரயில், கொல்லம்-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் முன்பதிவற்ற சிறப்பு ரயில் (06049), இன்று மாலை 5.30 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.40 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.