ஐதராபாத்:

ஊழல் மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

சிஎம்எஸ்- இந்தியா ஊழல் ஆய்வு 2018 என்ற ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து சிஎம்எஸ் அலோக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‘‘13 மாநிலங்களில் செயல்படும் 11 பொது சேவைகளில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. தெலங்கானால ஆந்திரா, கர்நாடகா, பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், டில்லி, பஞ்சாப், ராஜஸ்தான்ல மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த சர்வே நடந்தது.

பொது விநியோக திட்டம், மின்சாரம், அரசு மருத்துவமனை, பள்ளிக் கல்வி, குடிநீர் விநியோகம், 100 நாள் வேலை திட்டம், வங்கி சேவைகள், காவல்துறை, நீதிதுறை, வீட்டு வசதி துறை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.

இந்த பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்தது. தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களின் ஊழலுக்கு எதிரான செயல்பாடு மிக மோசமாக உள்ளது. இதேபோன்ற நிலை தான் பஞ்சாப் குஜராத்திலும் நிலவுகிறது. ராஜஸ்தான்ல கர்நாடகா, டில்லி மாநிலங்களில் இந்த செயல்பாடு மிதமான நிலையில் உளளது.

ஊழல்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்திலும், 2வது இடத்தில் தெலங்கானா, 3வது இடத்தில் பஞ்சாப், 4வது இடத்தில் ஆந்திரா, 5வது இடத்தில் குஜராத், 6வது இடத்தில் ராஜஸ்தான், 7வது இடத்தில் கர்நாடகா, 8வது இடத்தில் டில்லி, 9வது இடத்தில் பீகார் 10வது இடத்தில் உத்தரபிரதேசம், 11வது இடத்தில் மத்திய பிரதேசம், 12வது இடத்தில் மகாராஷ்டிரா, 13வது இடத்தில் மேற்கு வங்கம் உள்ளது.