தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு: இணைய தளத்தில் பார்க்கலாம்

சென்னை:

மிழக காவல்துறையில் 6140 காலிப்பணியிடங்களுக்கான நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டு தமிழக அரசின் காவலர் தேர்வு வாரியமான சீருடை பணியாளர்  தேர்வுக்குழு மம், 5538 இரண்டாம் நிலைக் காவலர்கள் , சிறைத்துறையில் காலியாகவுள்ள 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாகவுள்ள 216 தீயணைப்போர் (ஆண்),  46 பின்னடைவு காலிப்பணியிடங்கள் உள்பட  மொத்தம் 6140 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி  32 மாவட்டங்களில் 232 தேர்வு மையங்களில் நடைபெற்றது.  இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள… tnusrbonline.org  என்னும் இணையப் பக்கத்தில் Login செய்ய வேண்டும். பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லினை உள்ளிடவும். பின்னர் உங்கள் திரையில் தேர்வு முடிவுகள் தெரிவதை காணலாம்.

தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக உடல் தகுதி தேர்விற்கு அழைக்கப்படுவர்.

TNUSRB தேர்வின் விடைகளை பார்க்க.. கீழே உள்ள லிங்கை கிளிக்  செய்யவும்.

http://www.tnusrbonline.org/