டெல்லி:

இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும், உத்தரபிரதேசமும்தான் அதிகளவில் உள்நாட்டு
சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுலாத்துறை வாரியம் ஆண்டுதோறும் மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு
வருகை புரிந்தோரின் எண்ணிக்கையை கணக்கிடுவது வழக்கம்.
இதன்படி கடந்த ஆண்டு வெளிநாட்டவர்கள் அல்லாத உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை
1653 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டளவில் அதற்கு முந்தைய ஆண்டைவிட சுமார் 200 மில்லியன் அதிகமாகும்.

ஒவ்வொரு மாநிலம் வாரியாக கணக்கிட்டால் மத்தியபிரதேசத்தில்
184.7 மில்லியன், ஆந்திராவில் 158.5 மில்லியன், கர்நாடகாவில் 128.9 மில்லியன் அளவில் பயணிகள் வந்ததாக
இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழக்தில்
344.3 மில்லியன் பயணிகளும், உத்தரபிரதேசத்தில் 229.6 மில்லியன் பயணிகளும்
உள்நாட்டுச் சுற்றுலா சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டுச் சுற்றுலா 2014 ஐ விட 2015 ல் 11 சதவிதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

அது 2016ல் மேலும் வளர்ச்சி பெற்றுள்ளது.

இதன்மூலம் இந்திய சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற்று வருவதை உணரமுடிகிறது.