கால்நடை மருத்துவப்படிப்பு: இன்று 2வது கட்ட கலந்தாய்வு

சென்னை:

மிழக கால்நடை கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்காக  இன்று 2வது கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஏற்கனவே முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 24 முதல் ஜூலை 26 வரை முடிவடைந்த நிலையில்,  இன்றும், நாளையும்   இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச்.) படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு இன்று இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இதேபோன்று பி.டெக். (இளநிலை கால்நடை தொழில்நுட்ப படிப்பு) படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு நாளை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கில் நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன