தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை:

மிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்புக்கான தர வரிசைப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் துணைவேந்தர் பாலச்சந்திரன் தர வரிசை  பட்டியலை வெளியிட்டார். பி.டெக் உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்ப படிப்புக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு கடந்த மே மாதம் 21ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டு ஜூன் 6ந்தேதி நிறைவடைந்தது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஜூன் 11 மாலை 5.45 மணிக்குள் அனுப்பலாம் என்றும்,    ஜூலை, 3வது வாரம் கவுன்சிலிங் நடைபெறும் என்றும்  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கால்நடை மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியலை இன்று பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டு உள்ளார்.  தர வரிசை பட்டியலை இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

http://www.tanuvas.tn.nic.in/UGRank/ranklist.html

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கட்டுப்பாட்டில், சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் நெல்லையில், அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.

இந்தக் கல்லுாரிகளில், பி.வி.எஸ்.சி., எனப்படும், கால்நடை மருத்துவம், ஏ.ஹெச்., எனப்படும், கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கு, 360 இடங்கள் உள்ளன. மேலும், பி.டெக்., உணவு தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கு, 40; பி.டெக்., கோழியின தொழில்நுட்பட பட்டப்படிப்புக்கு, 40; பி.டெக்., பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு, 20 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 460 இடங்க ளுக்கு, 2018 – 19ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கால்நடை மருத்துவ படிப்பில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், பி.டெக்., உணவு தொழில் நுட்ப படிப்பில், 15 சதவீத இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக ஒதுக் கீட்டிற்கும் அளிக்கப்படும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, ஒன்பது இடங்களும், வெளி நாட்டினருக்கு, ஐந்து இடங்களும், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தோருக்கு, இரண்டு இடங்களும் ஒதுக்கப்படும்.

பி.டெக்., உணவு தொழில்நுட்ப பாடப்பிரிவில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளி நாட்டினருக்கு, தலா, இரண்டு இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கான   தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.  மூன்றாவது வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.