காவிரி வழக்கில் தமிழகத்திற்கு வெற்றி : அமைச்சர் சி.வி.சண்முகம்

--


சென்னை:

காவிரி வழக்கில் தமிழகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

காவிரி வழக்கில் மத்திய அரசின் வரைவு திட்டத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. காவிரி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் அந்த ஆணையத்துக்கே  உள்ளதாகவும் தீர்ப்பு கூறி உள்ளது.

உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம்,  தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

You may have missed