உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 4வது இடம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை:

டல் உறுப்பு தானத்தில் தமிழகம் 4வது இடத்தில் இருந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொது அலுவலக வளாகத்தில், உடல் உறுப்பு தானம் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்,  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ரத்த தானமும் மறைந்த பிறகு உடல் உறுப்பு தானமும் அவசியம் என்று வலியுறுத்தியவர், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம், நான்காவது இடத்தில் இருப்பதோடு மருத்துவ துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.