புதுடெல்லி:

2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடியைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டிற்கான தமிழகத்தின் சந்தை கடன் 50 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 107% அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு ஒருபுறம் குறைந்த வருவாய் வசூல் மற்றும் மறுபுறம் செலவினங்களை அதிகரித்துள்ளது, இது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சவாலான சூழ்நிலையை உருவாக்கியது. இதனால் அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன. மகாராஷ்டிராவிற்க்கு அடுத்தபடியாக அதிக அளவில் கடன் வாங்கிய பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது, தமிழகத்தை அடுத்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.