தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி, பிரதமர் தமிழர்களுக்கு வாழ்த்து

சென்னை:

விகாரி தமிழ்ப்புத்தாண்டையொட்டி, குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சித்திரை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாக காலங்காலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட உலக நாடுகளில் வாழும் தமிழ்ர்கள் இன்றைய நாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப்புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழ் மக்களுக்க  தங்களது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

‘நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மடல் வடிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

‘தமிழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்; அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்”  என குறிப்பிட்டுள்ளார்.

You may have missed