Random image

தமிழ்ப்புத்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (கடைசி 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்

விகாரி வருட பலன்கள்….தொடர்ச்சி…

துலாம்

பேச்சினால் அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் பாராட்டும்  வெற்றியும் கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளைக் குறுக்கே புகுந்து தீர்ப்பீங்க. பிரிந்த குடும்பங்களையும் நண்பர்களையும் சேர்ப்பீங்க. நண்பர்கள் வீட்டில் சுபகாரியம் நிகழ நீங்க காரணமா இருப்பீங்க.

2019 அக்டோபர் முதல்

மனசில் இத்தனை காலம் காணாமல் போயிருந்த தைரியமும் வீரமும் மீண்டும் வரும். பலகாலமாகத் தாயாருக்கு இருந்து வந்த கவலைகள் ஒரு முடிவுக்கு வநது வீட்டில்டி சந்தோஷம் நிலவும். உத்யோகத்தில் எதிர்பார்த்திருந்த மற்றும் எதிர்பாராத நன்மைகள் உங்களைத் தேடி வரும்.

விருச்சிகம்

தேவையில்லாத தாழ்வு மனப்பான்மை எப்பவுமே உண்டு உங்களுக்கு. உங்க ளுடைய திறமைகள் உங்களுக்கே கண்ணுக்குத் தெரியாது என்பதால் யாரா வது உங்களை உற்சாகப்படுத்திக்கிட்டே இருக்கணும். ஆனால் நினைவு வெச்சுக்குங்க. நீங்க நினைப்பதைக்காட்டிலும் நீங்க புத்திசாலி மற்றும் திறமைசாலிங்க.

2019 அக்டோபர் முதல்

குடும்பத்தில் ஒற்றுமை நிலவ உங்கள் முயற்சி தேவையா இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் யாருடனும் வாக்குவாதம் வேண்டாம். உங்களுக்கு வழிகாட்டியாக உள்ள ஒருவர் மூலம் நன்மைகள் கிடைக்கும். அவருடைய பாராட்டும் ஆசியும் கிடைக்கும்.

தனுசு

நீங்க எப்ப சிரிப்பீங்க.. எப்ப அடிப்பீங்க.. எப்ப கடிப்பீங்க.. எப்ப பாராட்டுவீங்க.. எப்ப கட்டிப்பிடிச்சுக் கண்ணீர் விடுவீங்கன்னு புரியாமல் எதிரில் உள்ளவங்க குழம்புவாங்க. அந்த அளவுக்கு நிச்சயமற்ற போக்கு நிலவும் உங்க செயல் பாடுகளில். ஏன் அப்படி? மாத்திக்குங்க. நல்ல வேளையாய்க் கருணையும் நல்ல மனசும் உள்ளதால் யாரும் எதையும் பெரிது படுத்தாமல் உங்களுடன் அனுசரிச்சுக் கட்டுப் போவாங்க. அதனால் பிழைச்சீங்க.

2019 அக்டோபர் முதல்

பலகாலம் பெண்டிங்கில் இருந்த விஷயங்களை முடிப்பீங்க. குறிப்பாய்ப் பயணங்கள்.. அதிலும் பிரார்த்தனைகள் அதிலும் குறிப்பாய்க் குல தெய்வக்கோயில் என்று எல்லாமும் முடிப்பீங்க. போதாக்குறைக்கு அலுவலக டூர்களுடம் உண்டு, பயணத்தின்போது பொருட்களை கவனமா வெச்சுக்குங்க. அது போதும்.

மகரம்

கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வந்த பிரச்சினைகள் அத்தனையிலிருந் தும் விடுதலை. எனவே மனசில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். லாபங்கள் திடீர்னும் எதிர்பார்க்காமலும் வரும். என்றைக்கோ இன்வெஸ்ட் செய்த பணம் இன்றைக்குக் குட்டிபோட்டுப் பெருகும்.

2019 அக்டோபர் முதல்

கொஞ்சமா நஞ்சமா. ஏகப்பட்ட செலவுங்க வரம். அதுக்கெல்லாம் நீங்க டென்ஷன் ஆக மாட்டீங்க. ஏன் தெரியுமா? அத்தனை செலவுகளும் நல்ல விஷயங்களுக்காகவும் கல்யாணம் போன்ற சுப காரியங்களுங்காகவும்தான் இருக்கும். மேலும் நல்ல முதலீடுகளாகவும் இருக்கும்.

கும்பம்

வேலை மாறும் ஆசை எழுந்தாலும் சற்றுப் பொறுமையா இருங்க. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. இப்போது அலுவல் சம்பந்தமாக எடுக்கும் பெரிய முடிவுகள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது சந்தேகமே. மற்ற படி நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உத்தரவாத மாய் உண்டுங்க.

2019 அக்டோபர் முதல்

பெரிய அளவில் லாபங்களையும் நன்மைகளையும் கட்டாயம் எதிர்பார்க்கலாம். நல்ல வழியில் தூய்மையான செயல்களால் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாத வருமானம் வரும். ஏற்கனவே குடும்பத்தில் நடந்த சுப நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட செலவை சமாளிக்க இப்போது நல்ல வகையில் சம்பாத்தியம் வர ஆரம்பிக்கும்.

மீனம்

கோலாகலம்.. குதூகலம் என்று மனசெல்லாம் மத்தாப்புதான். அரசியலில் ஈடுபட்டவங்களுக்கு எதிர்பாராத வெற்றிகள் உறுதியாய்க் கிடைக்கும். அலுவலகத்திலும் உறவினர் மத்தியிலும் செல்வாக்குக் குவியும். அப்பாவுக்கு உங்களாலும் உங்களுக்கு அவராலும் நன்மைகள் உண்டு. திடீர் அதிருஷ்டத்தை வெகுகாலத்துக்குப் பிறகு சுவைக்கறீங்க. குட். என்ஜாய்.

2019 அக்டோபர் முதல்

நிறைய வேலைகள் குவியும். அவை நிறைய லாபங்கள் அளிக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நிறையப் புகழ் அடைவீங்க. குடும்பத்தில் காத்திருந்த நன்மைகளும் சந்தோஷமும் இதோ வந்தாச்சு. பயணங்கள் நன்மை தரும்.

முற்றும்…