Random image

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்… வேதாகோபாலன் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

மிழ் ஆண்டு வரிசைப்படி,  அட்டவணையில் 34வதாக வரக் கூடிய சார்வரி வருடம் 2020 ஏப்ரல் 13ம் தேதி இரவு 7.20க்கு கிருஷ்ணபட்சம், சஷ்டி திதி, மூல நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் துவங்குகிறது. தமிழ் ஆண்டு வட்ட அட்டவணையில் 34வதாக வரக் கூடிய சார்வரி வருடம் 2020 ஏப்ரல் 13ம் தேதி இரவு 7.20க்கு கிருஷ்ணபட்சம், சஷ்டி திதி, மூல நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் துவங்குகிறது.

தற்போது நமது நாட்யை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும்  நோய்க் கிருமிகளின் தாக்கம் மே மாத இறுதியில்  குறையும், ஆனால் மீண்டும் சில கிருமிகள் உருவாக வாய்ப்புள்ளது. இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளது என, பஞ்சாங்கக் குறிப்புகள் கூறுகின்றன. ஓரளவு மழை பெய்து பயிர் செழித்தாலும் பற்றாக்குறை இருக்க வாய்ப்புள்ளது. ஆனால்.. அனைத்து சிரமங்களிலிருந்தும் மீண்டு வெளிவருவோம்.

தெய்வ வழிபாடும் ஆன்மிக நம்பிக்கையும் நம்மையெல்லாம் காப்பாத்தப்போகுதுங்க.

சிம்மம்

நன்மையும், தீமையும் கலந்தேதானுங்க நடைபெறும். பிள்ளைங்க வழியில் கொஞ்சம் நஷ்டம் ஏற்படலாம். பிறருக்கு ஜாமீன் போட்டு வாங்கிக்குடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். அதிலிருந்து சமாளிச்சு வெளியே வந்துடுவீங்க. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கணவன் – மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீங்க. பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்குமுங்க. திறமையை பார்த்து பதவி உயர்வு தானாக வந்து சேரும். ஒரு சிலர் சுயதொழில் செய்ய முன்வருவாங்க. . தாய்வழி ஆதரவு கிடைக்கு முங்க. தட்டிப் போன வாய்ப்புங்க எல்லாம் தானாக வந்து சேரும். புதிய வீடு வாங்கி அதுல குடியேறும் யோகம் உண்டுங்க. எதிரிகள் விலகுவர். கடன்சுமை குறையும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில வெற்றி கிடைக்குமுங்க. நோயில் இருந்து நிவாரணம் பெறுவீங்க. புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் மேலோங்கும். ஜாக்கிரதைங்க. எதிர்கால முன்னேற்றம் கருதி தீட்டிய திட்டங்கள் நிறவேறும். பழைய கடன்களையெல்லாம்  அடைத்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. வாவ்!! பிள்ளை களால் வந்த தொல்லை அகலும். வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள நினைப்பீங்க. கலைத்துறையில் உள்ளவங்களுக்கெல்லாம் ஒப்பந்தங்கள் அடிக்கடி வந்து கொண்டேயிருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

கன்னி

போன வருஷம் இருந்துக்கிட்டிருந்த மனக்குழப்பம் அகலும். பொருளாதார நிலை உயரும். வீடு மனை சம்பந்தமா இருந்துக் கிட்டிருந்த வழக்குகள் நல்லபடியா ஒரு முடிவுக்கு வருமுங்க. சொத்துகளில் இருந்த வில்லங்கங்களும், விவகாரங்களும் விலகும். கைமாறிய சொத்துகள் கூட அகெயின் உங்க கைகளுக்கு வந்து சேரும். உத்தியோகத்தை பொறுத்தவரை உயர்வு கிடைக்குமுங்க. அதிகாரிகளின் ஆதரவு திருப்தி அளிக்கும். விரய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். உங்களுக்கு தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். கொடுக்கல்-வாங்கலை ஒழுங்கு செய்து கொள்வீங்க. கணவன் – மனைவிக்குள் அன்பு மேலிடும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். சகோதரர்கள் உதவி செய்ய முன்வருவர். வாய்ப்புகள் கைநழுவி செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்க. பணப்பற்றாக்குறை அகலும். இனி கடன் வாங்கும் நிலை ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவங்க குணமறிந்து நடந்துக்குவாங்க. பணப்பற்றாக்குறை அகலும்.பயப்படாதீங்க. வருடத்தின் இரண்டாம் பாதியில் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழில் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கிகளின் ஒத்துழைப்பால் கடன் உதவி பெறுவீங்க. பிள்ளைகள் வழியில் உதிரி வருமானம் கிடைக்கும்.

பரிகாரம் : மீனாட்சி வழிபாடு செல்வ வளம் தரும்.          

துலாம்

பூர்வீக வீடுகளில் பாகப்பிரிவினை செய்துகொள்ள எடுத்த பஞ்சாயத் துகள் நல்ல முடிவிற்கு வருமுங்க. ஆன்மிக பணியை தொடர முன்வருவீங்க. நேர்முகத் தேர்விற்கு பலமுறை சென்றும் வேலை கிடைக்கவில்லையே. இந்த முறையாவது வேலை கிடைக்குமா, என்று நினைச்சவங்களுக்கு எதிர்பார்த்தபடியே வேலை  கிடைக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உதாசீ னப்படுத்திய உறவினர்கள் ஓடிவந்து ஒட்டிக்கொள்ள முன்வருவர். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். வீடு, இடம், வாங்கும் முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியத் தொல்லையில் இருந்து விடுபடுவீங்க. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டுங்க. பயணங்கள் பலன்தரும் விதத்தில் அமையும். சுபநிகழ்ச்சிகள் பலவும் இல்லத்தில் நடைபெற லாம். கல்யாண முயற்சிகள் கைகூடும். கருத்து வேறுபாடுகள் அகலும். சந்தர்ப்பங்கள் அனைத்தும் சாதகமாக அமையும். உடல் நலத்தில் இருந்த நோய் நொடிகள் பயந்துக்கிட்டு ஓடி ஒளியும். தந்தையின் ஆரோக்கியம் சீராக மருத்துவர்களை அணுகுவீங்க. முன்னோர் வழிச் சொத்துக்களின் முறையான பங்கீடுகள் கிடைக்கும். குடும்பத்தில் மூன்றாம் நபரால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.  வெளிநாட்டில் படிப்பை தொடர வேண்டும் என்று முயற்சித்த பிள்ளைகளுக்கு நல்ல பதில் வந்து சேரும்.

பரிகாரம் : ஐயப்பன் வழிபாடு வெற்றி அளிக்கும்.           

விருச்சிகம்

கொடுக்கல் வாங்கல்களில் ஒருசிலர் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களால் லைட்டா தொல்லைங்க ஏற்படும். வாங்கிய கடனைக்கொடுக்க ஏதேனும் ஒரு சொத்து விற்கும் சூழ்நிலை ஒரு வேளை ஏற்பட்டாலும் ஏற்படுமுங்க. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீங்க. அது அவசியமா-. அநாவசியமா என்று நல்லா திங்க் பண்ணிட்டு வாங்குங்க. வீடு மாற்றம், அல்லது ஊர் மாற்றம்  அல்லது நாடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். கூட்டாளிகள் கூடுதல் லாபம் தருவதாகச் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். சேமிப்புகள் கரைகின்றதே என்று கவலைப்படுவீங்க. மறைமுகப் பகை அதிகரிக்கும். இக்காலத்தில் எதையும் மனதிற்கு உள்ளேயே வைத்துக்கொள்வது நல்லதுங்க. ஆனாலும் வருஷத்தின் இரண்டாம் பாதியில் பண வரவு அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஸ்பெகுலேஷன் துறைகளைத் தவிர்க்கவும். குடும்ப நலம் திருப்தி தரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவாங்க. மக்களால் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். தந்தை நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவருமுங்க. இயந்திரப்பணிகள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். உத்தியோகஸ்தர்கள் அளவோடு வளர்ச்சி காண்பாங்க. பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவருமுங்க. வார்த்தைகளில் கடுகடுப்பைக் காட்டியவர்கள், இனி கனிவோடு பேசுவர். பயணங்கள் மூலம் பலன்கள் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

பரிகாரம் : பசு வழிபாடு சகல வளம் தரும்.          

நாளை: தனுசு, மகரம், கும்பம், மீனம் …